இன்ஸ்டா ரீல்ஸ் போடும் 29 வயது தவெக அமைச்சர்! 21 நாளில் அப்ரூவல்.. ஏஐ சிட்டி மாஸ்டர் பிளான்; உலக முதலீட்டாளர்களைக் கவரும் கீர்த்தனா!
இன்ஸ்டா ரீல்ஸில் முதலீட்டு வேட்டை: அசத்தும் 29 வயது தவெக அமைச்சர்!
சென்னை:
பொதுவாக 'தொழில்துறை அமைச்சர்'னாலே கோட்-சூட் போட்டுக்கிட்டு, பெரிய பெரிய பிசினஸ் மீட்டிங்ல ரொம்ப சீரியஸா பேசுறவங்களைத்தான் நாம பார்த்திருப்போம். ஆனா, "நாம இருக்குறது 2026-ல பாஸ்.. இங்க எல்லாமே 'டாட் காம்' வேகம்!" அப்படின்னு நிரூபிச்சு காட்டியிருக்காங்க தவெக அரசின் இளம் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா.
வெறும் 29 வயசேயான இந்த 'ஜென்-இசட்' (Gen-Z) அமைச்சர், இப்போ உலக முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க கையில் எடுத்திருக்கிற ஆயுதம் என்ன தெரியுமா? சோசியல் மீடியா மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels)!பாரம்பரிய மேடைப் பேச்சுகள், சிவப்பு நாடா (Red Tape) தாமதங்கள் எல்லாத்துக்கும் குட்பை சொல்லிட்டு, இன்ஸ்டா ரீல்ஸ் மூலமா கார்ப்பரேட் பாணியில் இவர் விடுத்துள்ள 'இன்வெஸ்ட் இன் தமிழ்நாடு' (Invest in TN) அதிரடி அழைப்பு, இப்போ உலக பிசினஸ் வட்டாரங்கள்ல செம வைரல்!
"ஃபைல் தேங்கினா ஸ்பாட் ஆக்ஷன்!" - 21 நாட்களில் சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ்!
"தமிழ்நாட்டுல தொழில் தொடங்கணும்னா மாசம் கணக்கா அரசு ஆபீஸ்கள்ல ஃபைல் தூக்கிட்டு அலைய வேண்டிய அவசியமே இல்லை. [ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க, 21 நாட்களுக்குள் ஒற்றைச் சாளர அனுமதி (Single Window Clearance) உங்க கைக்கு வரும்]" என்று தனது ரீல்ஸில் அதிரடி வாக்குறுதி கொடுத்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில், கோப்புகளில் தேவையில்லாத தாமதம் ஏற்பட்டால், முதலீட்டாளர்கள் அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் நேரடியாகப் புகார் அளிக்கும் புதிய ‘Direct Escalation System’ முறையையும் இவர் அமலுக்குக் கொண்டு வந்துள்ளார். தொழில் வளர்ச்சி சென்னை, ஓசூர் போன்ற ஒரு சில நகரங்களோடு நின்றுவிடாமல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக 'Fast-track Industrial Zones' உருவாக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதல் ‘ஏஐ சிட்டி’ மற்றும் ட்ரோன் காரிடார்!
அமைச்சரின் மாஸ்டர் பிளானில் மிக முக்கியமான அம்சம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான பிரத்யேக ‘ஏஐ அமைச்சகம் மற்றும் ஏஐ சிட்டி’ (AI Ministry & AI City) உருவாக்கம் தான். அத்துடன் ட்ரோன் காரிடார் (Drone Corridor), மின்சார வாகனத் தயாரிப்பு (EV Hub) மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் (Space Economy) ஆகியவற்றுக்குத் தனது துறை முன்னுரிமை அளிக்கும் எனப் பேசியுள்ளார் கீர்த்தனா.
சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு ₹6,000 கோடி பாதுகாப்பு வளையம்!
தனது சொந்தத் தொகுதியான சிவகாசியின் வாழ்வாதாரப் பிரச்சினையையும் அமைச்சர் மறந்துவிடவில்லை. சுமார் ₹6,000 கோடி மதிப்புள்ள சிவகாசி பட்டாசுத் தொழிலை முறைப்படுத்துவதற்கும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு பிரத்யேக 'Dedicated Policy Framework' கொள்கை வரைவை இன்று அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
எம்.எஸ்சி ஸ்டாட்டிஸ்டிக்ஸ் (M.Sc Statistics) படித்துவிட்டு, ஐந்து மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய கீர்த்தனாவின் இந்தத் துடிப்பான கார்ப்பரேட் பாணி நிர்வாகம், தமிழ்நாட்டின் தொழில் துறையில் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.

Comments